» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் பறக்கும் படை சோதனை: ரூ.60 ஆயிரம் பறிமுதல்!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:02:09 PM (IST)
விளாத்திகுளம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.60 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விளாத்திகுளத்தை அடுத்து சின்னவநாயக்கன்பட்டியில் தனியார் மில் அருகே இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.60ஆயிரத்து 50 கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம், ராஜீவ்காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்ரம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.