» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி
புதன் 3, ஏப்ரல் 2024 8:19:05 AM (IST)
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (52). இவர் எட்டயபுரம் அருகே நீராவிபுதுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு காலையில் திரும்பி வருவது வாடிக்கை. இதன்படி, இவர் நேற்று காலையில் பணியை முடித்துவிட்டு, நீராவிபுதுப்பட்டி கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
பிள்ளையார்நத்தம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியது. இதில் மோட்டார் ைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள சுடலைமுத்து வீட்டிற்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
