» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பராமரிப்பு பணி: தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து

புதன் 3, ஏப்ரல் 2024 8:16:52 AM (IST)

பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மதுரை கோட்டப்பகுதியில் ஏப்ரல் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - நெல்லை ரயில் (06667) மற்றும் நெல்லையில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை - தூத்துக்குடி ரயில் (06668) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

வருகிற 22-ஆம் தேதி நெல்லை- பாலக்காடு - நெல்லை ரயில்கள் (16791/16792) கொல்லம் - நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வருகிற 7-ஆம் தேதி, 14-ஆம் தேதி ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஓஹா விரைவு ரயில் வருகிற 8, 15-ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு 115 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory