» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில், 14 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

புதன் 3, ஏப்ரல் 2024 8:14:01 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 14 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், மீன்பிடி தடைக்காலத்திலும் கேரளா மீனவர்கள் தூத்துக்குடி கடலில் மீன்பிடிப்பதாலும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி விசைப்படகு மீனவர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதே நேரத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த கேரளா, மற்றும் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் 86 பேரையும், 6 படகையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மேலும் மீனவர்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர். 

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு புனிதவெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்ளிட்டவை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். 14 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலையில் மொத்தம் 89 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால் தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory