» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் கைது!.
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:53:41 PM (IST)
சாத்தான்குளம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்து வண்டியை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் திருட்டுத் தனமாக ஓடை மற்றும் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது செம்மன்குடியிருப்பு பகுதியில் மாட்டு வண்டியை விட்டு தப்பி ஓட முயன்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் செம்மன்குடியிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த வேதக்கண் மகன் கோசல்ராம் (47), வடக்கு தெருவைச் சேர்ந்த சாமி மகன் சுயம்புத்துரை (58) ஆகியோர் எந்தவித அனுமதியும் இன்றி அதே பகுதியில் உள்ள ஓடையில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. உடன் போலீசார் இருவரை கைது செய்து அரை யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
