» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே தகவல்
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:10:24 PM (IST)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தூத்துக்குடி சென்னை எழும்பூர் முத்து நகர் ரயில் (12694), தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதல் 16 வரையும், மைசூர் - தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் 15 வரையும் மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று அறிவித்துள்ள தெற்கு இரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம நாயகம், எம்பவர் இந்தியா, நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கெளரவ செயலாளர் ஆ.சங்கர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINApr 4, 2024 - 09:02:45 AM | Posted IP 172.7*****