» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி : சின்னம் ஒதுக்கீடு
சனி 30, மார்ச் 2024 8:34:01 PM (IST)
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 20.03.2024 முதல் 27.03.2024 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 53 வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து வரப்பட்டு 28.03.2024 அன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. இதில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்று 30.03.2024 பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, பிற்பகல் 3.00 மணி வரை 3 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 28 வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கினார்.
இந்த தேர்தலில் 03 பெண்கள் 25 ஆண்கள் உட்பட 28 நபர்கள் போட்டியிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம்
1. கனிமொழி (தி.மு.க.) உதயசூரியன்
2. சிவசாமி வேலுமணி (அ.தி.மு.க) இரட்டை இலை
3. மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) யானை
4. கலீர் முருகப் பாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) பிரஷர் குக்கர்
5. டாக்டர் காட்ப்ரே நோபல் (அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) ஆட்டோ ரிக்க்ஷா
6. பெருமாள் குமார் (புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி) காலணி
7. என்.பி.ராஜா (நாம் இந்தியர்) டார்ச் லைட்
8. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர் கட்சி) ஒலிவாங்கி (மைக்)
9. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமிழ் மாநில காங்கிரஸ்) மிதிவண்டி
10. அருணா தேவி (சுயேட்சை) கரும்பு விவசாயி
11. இசக்கிமுத்து (சுயேட்சை) பலாப்பழம்
12. கண்ணன்(சுயேட்சை) உழவுகருவி
13. கிருஷ்ணன் (சுயேட்சை) குளிர்சாதனப்பெட்டி
14. சாமுவேல் (சுயேட்சை) மோதிரம்
15. சித்திரை ஜெகன் (சுயேட்சை) தென்னந்தோப்பு
16. சிவனேஸ்வரன் (சுயேட்சை) பலூன்
17. சுடலைமுத்து (சுயேட்சை) வாயு சிலிண்டர்
18. செந்தில்குமார் (சுயேட்சை) கைப்பெட்டி
19. டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை) பென்டிரைவ்
20. பிரசன்னகுமார் (சுயேட்சை) ட்ரக்
21. பொன்குமரன் (சுயேட்சை) தொலைக்காட்சிப்பெட்டி
22. பொன்ராஜ் (சுயேட்சை) கேரம்பலகை
23. ராதாகிருஷ்ணன் (சுயேட்சை) தீப்பெட்டி
24. ஜெயக்குமார் (சுயேட்சை) பானை
25. ஜேம்ஸ் (சுயேட்சை) மடிக்கணினி
26. காந்திமள்ளர் (சுயேட்சை) மிக்ஸி
27. சண்முகசுந்தரம் (சுயேட்சை) வைரம்
28. செல்வகுமார் (சுயேட்சை) கணினி
இக்கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் பிரபு, வேட்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.