» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜனநாயகம் வெற்றிபெற மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!

ஞாயிறு 3, மார்ச் 2024 7:22:42 PM (IST)மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "தமிழகம் மற்றும் தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். வீடு இல்லாதவர்களை கண்டறிந்து, 8 லட்சம் பேர் அடையாளப் படுத்தப்பட்டு, அவர்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன.

இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம், கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைத்துள்ளது. வரலாறு திருத்தப்படுகிறது. வரலாற்றை மாற்றி அழிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம். 

ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கின்றனர். பொய் சொல்லி, பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். இங்குள்ள மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார். தி.மு.க.வை மோடி மட்டு மல்ல, உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.

கல்வி கடன், விவசாய கடன், மகளிர் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க. பெரும் ஊழல் செய்துள்ளது.90 சதவீத நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளது.கொரோனா தடுப்பூசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பா.ஜ.க.விற்கு நிதி அளித்து உள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

TUTY MAKKALMar 4, 2024 - 04:44:59 PM | Posted IP 172.7*****

பாஜக ஐ பார்த்து பயம் வந்துவிட்டது.....

ஓட்டு போட்ட முட்டாள்Mar 4, 2024 - 10:43:22 AM | Posted IP 162.1*****

மோடி தூத்துக்குடிக்கு வரும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் ஆள் தான் நீங்க தானே, அதே மாதிரி மோடி தமிழகத்தில் சுடலையும் , உதவாநிதியும் ஈஈஈ பல்லை காட்டி சிவப்பு கம்பளம் அமைத்து வரவேற்பார்கள். அவர்கள் என்ன மாதிரி ஆட்கள் தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு பலூன் பறக்க விடுவார்கள், ஆனால் அது நடிப்பா தெரியவில்லை, நாங்க எல்லாம் முட்டாளா , எங்களை முட்டாள் ஆக பார்கிறீங்களா ??

மக்கள்Mar 4, 2024 - 10:34:07 AM | Posted IP 162.1*****

போதும் போதும்.

makkalMar 4, 2024 - 09:00:08 AM | Posted IP 172.7*****

Kalvi kadanai ratthu seivom entru entru kooriathu neengal thane? Neengal seiya vendiyathai mathiya arasu seiya villai entru poi sollukireergal

கட்டுமரன்Mar 3, 2024 - 09:54:46 PM | Posted IP 172.7*****

கூடவே "வாரிசு அரசியல் ஒழிய வேண்டும்" என்றும் சொல்லுங்களேன்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory