» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலியோ சொட்டு மருந்து முகாம்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

ஞாயிறு 3, மார்ச் 2024 11:32:21 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

போலியோ சொட்டு மருந்து இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தாகும். போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு 1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து நூற்று தொன்னுற்று ஒன்பது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள் இரயில் நிலையங்கள்,மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

இன்று 03.03.2024 இம்முகாமினை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் எஸ்.பொற்ச்செல்வன்,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory