» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே இளம்பெண் கொடூர கொலை : போலீஸ் விசாரணை!!

வியாழன் 29, பிப்ரவரி 2024 8:51:38 PM (IST)

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் மெயின் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி காளியம்மாள் (38),  இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ராமச்சந்திரன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். காளியம்மாள் தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இன்று மாலை 5 மணிக்கு பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்த மகன்கள் தாயார் படுக்கை அறையில் மயங்கி கிடப்பதை கண்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பக்கத்தில் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது காளியம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உதட்டில் ரத்தக்காயம் உள்ளது. இது குறித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் (பொ) மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியம்மாள் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர் பார்வையிட்டார். மேலும் காளியம்மாளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory