» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 29, பிப்ரவரி 2024 5:05:26 PM (IST)



ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வேதாந்தா நிறுவனத்திற்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். 

இதனையடுத்து, கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது, ''ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆலையால் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டது. ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. உயர்நீதிமன்ற முடிவில் தலையிட விரும்பவில்லை'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Mar 1, 2024 - 07:54:38 AM | Posted IP 162.1*****

திமுக அதிமுக இருக்கும்வரை உருப்படியாக காலி பண்ண மாட்டாது ஏன் என்றால் அரசியல்வாதிகளுக்கு துட்டு வேணுமாம்.

JamesMar 1, 2024 - 07:32:15 AM | Posted IP 172.7*****

அற்புதமான தீர்ப்பு. அரசு ஆலையை உடனடியாக அகற்ற ஆவன செய்ய வேண்டும்.

கே.கணேசன்.Feb 29, 2024 - 10:14:10 PM | Posted IP 172.7*****

மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory