» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வியாழன் 29, பிப்ரவரி 2024 4:34:40 PM (IST)தூத்துக்குடியில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த 19ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது. 

இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களில் இருந்து வருகை தந்த நூற்றிற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்ற கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.


மக்கள் கருத்து

SasikumarMar 2, 2024 - 09:41:12 PM | Posted IP 172.7*****

ஊதிய நிர்ணயம் அட்டவணை பரிசிலித்தால் அவர்களுக்கு வருமா வராதா என்று போல சிரிக்கலாம்

ஓட்டு போட்ட முட்டாள்Mar 1, 2024 - 07:59:18 AM | Posted IP 162.1*****

அந்த வாக்குறுதி நிறைவேறாமல் இருந்த நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்களை போய் நாக்கை பிடுங்கி கேளுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory