» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

வியாழன் 29, பிப்ரவரி 2024 4:11:30 PM (IST)தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மகமைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பழரசம் பா. விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்சிலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் எஸ்.ராஜதுரை சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார். பள்ளிச் செயலாளர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார். 

முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழா நிகழ்வுகளை பள்ளியின் கலைக்குழு ஆசிரியர் பார்ஜின் தொகுத்து வழங்கினார். விழாவில் மகமை துணை செயலர், ஆனந்த கண்ணன் மகமை பொருளாளர், மதியழகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர், ராஜசேகரன் நிர்வாக குழு உறுப்பினர்கள், ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், பார்த்திபன், எம் எஸ் எஸ் சுரேஷ், அரவிந்த், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory