» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் வருகை : தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை!

திங்கள் 26, பிப்ரவரி 2024 4:50:17 PM (IST)

பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்.27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய தினங்களில் துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்திட துாத்துக்குடி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிக்க  செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மீனவர்கள் கடலுக்கு யாரும் கடலுக்கு எனவே. மேற்குறிப்பிடப்பட்டுள்ள மீன்பிடிக்க செல்லக்கூடாது என்பதனை தங்களது சங்கத்தை சார்ந்த அனைத்து மீனவர்களும் அறிந்திடும் வண்ணம் அறிவிப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் லாரிகள் செல்லத்தடை!

பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 27.02.2024 அன்று மதியம் 2:00 மணி முதல்  28.02.2024 மதியம் 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல லாரிகள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று வஉசி துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக துறைமுகம், டிரக் பார்க்கிங் டெர்மினல் முதல் நுழைவு வாயில் வரை வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது. எனவே, அதற்கேற்ப லாரி இயக்கங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory