» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிக்க முயற்சி - இ.ம.க., புகார்!!

திங்கள் 26, பிப்ரவரி 2024 12:30:22 PM (IST)தூத்துக்குடியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிப்பதை தடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் தா.வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் வசித்து வரும் மக்கள் தலைமுறைகள் கடந்து அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் அங்கு குடியமர்ந்த காலம்த்தொட்டே அவர்கள் வழிபடுவதற்காக ஸ்ரீ பேச்சியம்மன், சுடலைமாடசாமி திருக்கோவிலை நிர்மானித்து வழிபட்டு வந்தனர். அக்கோவிலில் தினசரி பூஜைகள், கொடை விழா, கும்பாபிஷேகம் போன்றவற்றை நிர்வகிக்க ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் ஒவ்வொருவரும் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்கள்.

தற்பொழுது மைக்கேல் அருள் ரீகன் என்பவர், ஆவுடையார்புரம் முழுவதும் தான் வாங்கியுள்ளதாக கூறி, அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை ரவுடிகள் மூலமாக மிரட்டியும், விரட்டியும் வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை கொண்டு மேற்படி திருக்கோவிலை இடிக்கவும் முயற்ச்சித்து வருவதோடு அப்பகுதி மக்களை வழிபாடு நடத்த அனுமதிக்காமல் இடையூறு செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் தினமும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி சுமார் 100 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலை பாதுகாத்திடவும், அப்பகுதி மக்கள் இடையூறு இல்லாமல் வழிபட வழிவகை செய்ய வேண்டியும், திருக்கோவிலை இடிக்க முற்படும் மைக்கேல் அருள் ரீகன் என்பவர் மீதும் அவருக்கு துணை போகும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 28, 2024 - 10:16:40 AM | Posted IP 172.7*****

அடுத்தவன் இடத்திற்குள் நுழைந்து இடத்தை ஆட்டைய போட்டு, அதிலிருந்து தப்பிக்க கோவிலை கட்டிக்கொண்ட மோசடி கும்பல்...

kesavanFeb 26, 2024 - 09:58:51 PM | Posted IP 172.7*****

ethu muddalkal rss kaikulikalnaeegal velaikal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory