» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள்: அமைச்சர்கள் ஆய்வு

வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:29:28 PM (IST)



தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை வந்து சிப்காட் வளாக பர்னிச்சர் பார்க் அருகே அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும், சூசைபாண்டியபுரம் மங்களகிரி விலக்கு அருகே நலதிட்ட உதவிகள் வழங்க உள்ளார். 

இதையொட்டி விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்தசேகரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், திமுக நிர்வாகிகள் உமரி சங்கர், கே.பி. ராஜா ஸ்டாலின், வழக்கறிஞர் செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory