» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி நூலாசிரியருக்கு பசுமை விருது

வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:17:53 PM (IST)கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 119வது பன்னாட்டு ரோட்டரி தினத்தை முன்னிட்டு நூலாசிரியர் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், கோவில்பட்டி பசுமை இயக்கத்தின் தலைவருமான ஜெகஜோதி எழுதிய இயற்கை எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 30ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில் இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வன், சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கி பாராட்டினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன், ராஜமாணிக்கம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory