» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:46:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் 18 வயதிற்கு மேற்பட்ட பணிபுரியும் பெண்களுக்கான விடுதியை (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன்படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். 

எனவே உரிமம் பெறாத விடுதிகள் உரிய ஆவணங்களுடன் www.tnswp.com இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகளை மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளதால் இணையதளம் வாயிலாக 29.02.2024க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகளின் விவரத்தினை விண்ணப்பத்தின் வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவகம்(0461-2325606), தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory