» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொத்து குவிப்பு வழக்கு: குமரியில் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:24:53 PM (IST)

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக குமரியில் உள்ள சார் பதிவாளர் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்..
திருநெல்வேலி மாவட்டம் வி. கே. புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பு அலுவலராக இருப்பவர் வேலம்மாள். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு குமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ளது. அங்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஒரே நேரத்தில் இங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையில் ஏராளமான வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
