» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது : 6 இருசக்கர வாகனங்கள் மீட்பு

வியாழன் 22, பிப்ரவரி 2024 11:02:37 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. 

தூத்துக்குடியில் கடந்த 16.02.2024 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர்திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று ஸ்பிக் லேபர் கேட் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தவரை மேற்படி தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஓட்டப்பிடாரம் சந்தணமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22) என்பதும், அவர் மேற்படி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடி நம்பர் பிளேட்டை கழட்டி வைத்து ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து தங்ககுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.2,07,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் தங்ககுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று ஏற்கனவே 5 இருசக்கர வாகனங்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் அவரிடமிருந்து ரூபாய் 1,93,000/- மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

மேற்படி துரிதமாக செயல்பட்டு கைது செய்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


மக்கள் கருத்து

JacobFeb 22, 2024 - 11:44:25 PM | Posted IP 172.7*****

Super power ful police tutucorin police

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory