» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா

வியாழன் 22, பிப்ரவரி 2024 7:59:13 AM (IST)தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியினர் 150க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் முன்னிலையில்  நடைபெற்றது. வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். 

இதில், தெற்கு திமுக மாவட்ட பிரதிநிதி அஜய் கோஸ், மாப்பிள்ளையூரணி காங்கிரஸ் ஊராட்சி செயலாளர் வேல்ராஜ், காங்கிரஸ் ஒன்றிய மகளிர் அணி தலைவி பழனியம்மாள், 2வது வார்டு அதிமுக பொருளாளர் பால்ராஜ், அதிமுக மருத்துவர் காலனி கிளைச் செயலாளர் செல்வகுமார், உள்ளிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வீரமணி, அமைப்பாளர் லிங்கராஜ், வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Feb 22, 2024 - 04:37:59 PM | Posted IP 172.7*****

வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்.🌺🌹🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory