» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புதன் 21, பிப்ரவரி 2024 5:41:24 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய நிலையில், சாமானிய மக்கள் நேரடியாக உச்ச நீதிமன்றம் வரை வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது என்றும் தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தவறு என கூற முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை தேசிய சொத்து என்று குறிப்பிட்டு, பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைக்க முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் நடந்த கடுமையான போராட்டங்கள் அதன் காரணமாக எழுந்த வன்முறையைத் தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Feb 24, 2024 - 06:01:53 PM | Posted IP 162.1*****

திராவிட கட்சிகள் இருக்கும்வரை உருப்படியாக மூடாது

MagarajaFeb 23, 2024 - 10:33:25 AM | Posted IP 172.7*****

திறக்கட்டுமா உன் வீட்ல இளவு விழுந்தா இப்படி solluviya..திறக்க வேண்டாம்

மனிதம்Feb 22, 2024 - 06:02:33 PM | Posted IP 172.7*****

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம். மக்கள் வாழ்வுரிமை பாதுகாக்க வேண்டும்

செல்வகுமரன்Feb 22, 2024 - 10:52:29 AM | Posted IP 172.7*****

விரைவில் திறக்கட்டும்

யாருக்குFeb 22, 2024 - 08:01:50 AM | Posted IP 162.1*****

கண்ணு முழி யக்காவுக்கா ?

T Esakkimuthu, Perurani, Tuticorin dist 628102Feb 22, 2024 - 07:32:25 AM | Posted IP 172.7*****

Permanently close the starlite plant please

Raj GFeb 21, 2024 - 09:38:57 PM | Posted IP 172.7*****

Meendum sterlite factory open panna vendum

peopleFeb 21, 2024 - 07:51:15 PM | Posted IP 172.7*****

fully closed the sterlight factory in tuticorin area and tamilnadu

sathyaFeb 21, 2024 - 06:59:59 PM | Posted IP 172.7*****

அப்போ கொஞ்சம் லேட்டா திறக்கலமா?

தூத்துக்குடிFeb 21, 2024 - 05:51:20 PM | Posted IP 162.1*****

விரைவில் திறக்கட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory