» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையோர மணல் குவியல்களை அகற்றும் இயந்திரங்கள் : மேயர் ஆய்வு!
புதன் 21, பிப்ரவரி 2024 5:17:50 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர மணல் குவியல்களை அகற்றுவதற்கு 10 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த இயந்திரங்களை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தி என்டு என்டு என்ற முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் மாநகரை தூய்மையாகவும் மாசில்லாமலும் வைத்திருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதில் ஒரு பகுதியாக சாலை ஓரத்தில் குவியும் மணல்களை அகற்றுவதற்கு முதற்கட்டமாக 10 மணல் அகற்றும் இயந்திரங்களை வாங்கியுள்ளோம். மேலும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன்,மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
NameFeb 22, 2024 - 06:39:31 AM | Posted IP 172.7*****