» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டை பாதை இணைப்பு பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு

திங்கள் 19, பிப்ரவரி 2024 9:28:26 PM (IST)

திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06675 மற்றும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து 11.05 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் 06679, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல மறுமார்க்கத்தில், திருச்செந்தூரிலிருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி வரை செல்லும் வண்டி எண் 06680 மற்றும் மாலை 06.15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06678, ஆகியன முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06409 ரயிலானது, 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

மேலும், 16732 திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில், திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பாலக்காடு செல்லும், மற்றும் வண்டி எண் 16731 பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் பயணிகள் ரயில் திருநெல்வேலியில் நிறுத்தப்படும். இதனால் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதே போல செங்கோட்டை, தென்காசி to திருநெல்வேலி ரயில் போக்குவரத்திலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. நாளை திருச்செந்தூரில் மாசி திருவிழா நடைபெற உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

MRamanathanFeb 22, 2024 - 05:43:28 PM | Posted IP 172.7*****

We booked 5 tickets in Nagercoil -chennai express on25-02-2024 Sunday from tirunelveli to Egmore just 10 days before. We are all senior citizens.Isit not possible to plan your maintenance work 30 days in advance? Otherwise you have to arrange for our journey the trains which are leaving from tirunelveli on that day.

JAYAPALFeb 22, 2024 - 03:34:23 PM | Posted IP 172.7*****

Good work by railway employees & contract workers

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory