» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் வணிக வரித்துறை அலுவலகம் திறப்பு விழா

சனி 17, பிப்ரவரி 2024 4:38:55 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தினை காணொலிக் காட்சி வாயிலாகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு வணிகவரித்துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (17.02.2024) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டார். புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் உதவி வணிகவரி அலுவலகம் 1 & 2ல் வணிகவரி அலுவலர் அறை, துணை வணிகவரி அலுவலர் அறை உதவி வணிகவரி அலுவலர் அறை அலுவலக அறை, உணவு அருந்தும் அறை, கணினி அறை ஆவண காப்பக அறை பதிவு வைப்பறை, ஓட்டுநர் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் உதவி வணிகவரி அலுவலகம் (Enforcement) மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் அறை, வணிகவரி அலுவலர் (குரூப்-2) அறை, உதவி வணிகவரி அலுவலகம் (Enforcement) அறை துணை வணி அலுவலர் (குரூப்-1) அறை, வணிகவரி அலுவலர் (யுரனவை) அறை, உதவி வணிகவரி அலுவலர் அறை, புள்ளியியல் ஆய்வாளர் அறை மேலாளர் அறை அலுவலர் அறை எழுதுபொருள் அறை உணவு அருந்தும் அறை, கனிணி அறை, ஆவண காப்பக அறை பதிவு வைப்பறை ஆவர்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தனத்தில் துணை ஆணையர் அலுவலகத்தில் வணிக வரி அலுவலர் (குரூப்-1) (Squard) gear also apost (குரூப்-2) அறை துணை வணிகவரி அலுவலர் (ளுஙரயசன) அறை ஆவண காப்பக அறை, பதிவு வைப்பறை Pantry, 100 நபர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் துணை ஆணையர் அலுவலகம் உதவி ஆணையர் I அலுவலகம் உதவி ஆணையர் II அலுவலகம், உதவி ஆணையர் III அலுவலகம் மற்றும் உதவி இயக்குநர் செயலாக்க அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் அமைத்து இயங்கும் வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory