» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இறகுபந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் அணி தங்க பதக்கம் வென்றது!
திங்கள் 12, பிப்ரவரி 2024 3:34:31 PM (IST)

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையேயான இறகுபந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தங்க பதக்கம் வென்றது.
அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுபாட்டு குழு மற்றும் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக விளையாட்டு குழுவினரால் சென்னையில் 07.02.2024 முதல் 09.02.2024 வரை அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையேயான இறகுபந்து மற்றும் சுண்டாட்டம் (Carrom) போட்டிகள் நடைபெற்றது.
அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற இறகுபந்து போட்டியில் சென்னை, காமராஜர், வ.உ.சிதம்பரனார், கொச்சி, நியூமங்களூர், மும்பை, விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம், கான்ட்;லாவிலுள்ள தீன்தயால் மற்றும் மும்பையில் உள்ள ஜவர்கலால் நேரு துறைமுகம் ஆகிய அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியானது ஆண்கள் அனைத்து வயதினர் பிரிவு, 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவு, 50 வயதிற்கு மேற்ப்பட்ட பிரிவு ஆகிய பிரிவுகளுக்கிடையே மூன்று நாட்களாக நடைபெற்றது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக இறகுபந்து வீரர் ஜே. ரோஜஸ், 50 வயத்திற்கு மேலுள்ள தனி ஆட்ட பிரிவில் தங்க பதகத்தையும், எ. டக்லஸ் பொன்ராஜ், ஆண்கள் அனைத்து வயதினர் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் ஒட்டு மொத்த குழு ஆண்கள் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது ஜீப் மோதி விபத்து: மாட்டு வியாபாரி பலி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:43:38 AM (IST)

மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)
