» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
திங்கள் 12, பிப்ரவரி 2024 3:12:59 PM (IST)
மாப்பிளையூரணி பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்தில் உள்ள நேரு காலனி, மற்றும் பாக்கிய செல்வன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர்.