» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் உரிய இழப்பீடு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு!

திங்கள் 12, பிப்ரவரி 2024 12:16:00 PM (IST)

விபத்தில் ஊனம் அடைந்த நபர் தனதுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கச்சனாவிளை துரைச்சாமிநகர் தெற்கு தெருவைச் சேர்ந்த வயன பெருமாள் மகன் ஆத்திமுத்து (39) என்பவர் மேல்சட்டை அணியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வந்து மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், நான் குரும்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் கையில் பாதிக்கப்பட்டு 40% ஊனமாக உள்ளேன். 

தற்போது என்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் நான்கு குழந்தைகளுடன் வாழ்வதாரம் இழந்து வாழ்ந்து வருகிறேன். விபத்து ஏற்படுத்திய நபரிடம் கையூட்டுப்பெற்று எந்தவித விசாரணையும் செய்யாமல் எப்ஐஆர் பதிவு செய்யாத குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு உரிய இழப்பீடு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூக்கமின்றி தவித்த இளைஞர் தற்கொலை!!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 7:58:11 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory