» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன் விலை உயா்வு: மீனவா்கள் மகிழ்ச்சி

ஞாயிறு 11, பிப்ரவரி 2024 8:22:21 AM (IST)

தூத்துக்குடியில், வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகளும் குவிவது வழக்கம். இதனால், சனிக்கிழமைகளில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் அதிகமாக கரைதிரும்பும். ஆனால், அண்மையில் புளியம்பட்டி புனித அந்தோணியாா் கோயில் திருவிழா காரணமாக ஆழ்கடல் மீனவா்கள் பலா் கடந்த 8ஆம் தேதிக்கு மேல்தான் கடலுக்குச் சென்றனா்.

எனவே, குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே நேற்று சனிக்கிழமை கரை திரும்பின. இதனால், மீன்வரத்து குறைந்திருந்ததால், விலை அதிகரித்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1,000, விளைமீன் ரூ. 500, ஊளி மீன் ரூ. 450, பாறை மீன் ரூ. 4,00, சூரை, கிழவாலை மீன்கள் ரூ. 200, நண்டு ரூ. 800, சாளை ஒரு கூடை ரூ. 1,200 என விற்பனையாகின. குறைவான மீன்கள் கிடைத்த கவலையிலிருந்த மீனவா்கள், அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து

என்னதுFeb 11, 2024 - 09:55:03 AM | Posted IP 172.7*****

மீனவா்கள் மகிழ்ச்சி யா? அவங்கெல்லாம் கடல்ல விவசாயம் செஞ்சி வளர்த்த மீன்களா? பொதுமக்களுக்கு மகிழ்ச்சி இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory