» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசிடபிள்யூ சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம்

சனி 10, பிப்ரவரி 2024 4:56:20 PM (IST)சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் தலைவன்வடலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் தலைவன்வடலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆத்தூர் சங்கர் மருத்துவமனை டாக்டர் மாலதி பத்மநாபன், டாக்டர் ஒலிமுத்து, காயல்பட்டணம் கேஎம்டி மருத்துவமனை டாக்டர் காதர் பாஷா, திருச்செந்தூர் ஸ்ரீ அம்பிகை ஆர்த்தோ மருத்துவமனை டாக்டர் பார்த்தசாரதி, திருச்செந்தூர் எடிஷன் மருத்துவமனை டாக்டர் ஜெஃப் ரெட்லின், டிசிடபிள்யூ டாக்டர் சண்முகம், மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

இம்முகாமில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, எலும்பு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 154 பேர் பயனடைந்தனர். டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாக துணைத் தலைவர் ஜி. சீனிவாசன் மற்றும் தலைவன்வடலி கிராமத்தின் பிரதிநிதிகள் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மக்கள் கருத்து

KumarFeb 10, 2024 - 05:45:14 PM | Posted IP 172.7*****

🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூக்கமின்றி தவித்த இளைஞர் தற்கொலை!!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 7:58:11 PM (IST)

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory