» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஜய் கட்சியில் பில்லா ஜெகன் நீக்கம்: புதிய மாவட்ட செயலாளர் நியமனம்!!
சனி 10, பிப்ரவரி 2024 11:05:40 AM (IST)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் பில்லா ஜெகன், விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர். அவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் ஆவார். விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகத்தின் களப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேலை செய்ய வேண்டும், மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் கட்சி, விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் பொழுது தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன், விஜய் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்துள்ளது. இவர் பில்லா ஜெகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)

MGR FANSFeb 10, 2024 - 02:57:18 PM | Posted IP 172.7*****