» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் : ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவு!
வியாழன் 1, பிப்ரவரி 2024 5:18:30 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் 18 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்னர்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்களும், நியமனங்களும் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: கோவில்பட்டி வட்டாட்சியர் கே.லெனின், அல்லிகுளம் சிப்காட் 5ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். திருச்செந்தூா் வருவாய் வட்டாட்சியர் பி.வாமணன், அல்லிகுளம் சிப்காட் 7ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் வட்டாட்சியர் ஐ.ரதிகலா, திருச்செந்தூா் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். ஏரல் வருவாய் வட்டாட்சியர் ஆா்.கோபாலகிருஷ்ணன், திருச்செந்தூா் இஸ்ரோ அலகு 6 நில எடுப்பு வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் என்.மல்லிகா, எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலா் கே.சரவண பெருமாள், கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் 5ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் எம்.கோபால், ஏரல் வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். விளாத்திகுளம் தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலை அருப்புக்கோட்டை ரயில்வே 3ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் கே.இசக்கி முருகேஸ்வரி, சாத்தான்குளம் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் டி.செந்தூர்ராஜன், திருச்செந்தூா் ஒன்றாம் அலகு இஸ்ரோ நில எடுப்பு வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். திருச்செந்தூா் இஸ்ரோ 7ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் ஏ.பாலசுந்தரம், திருச்செந்தூா் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
எட்டயபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பி.ரகுபதி, தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். கோவில்பட்டி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஏ.ராஜ்குமாா், கோவில்பட்டி ஆதி திராவிடா் நலன் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி ஆதிதிராவிடா் நலன் வட்டாட்சியர் டி.ராமகிருஷ்ணன், எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆா்.பாஸ்கரன், விளாத்திகுளம் தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலை அருப்புக்கோட்டை ரயில்வே 3ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி - மணியாச்சி ரயில்வே 1ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் ஏ.முரளிதரன், கோவில்பட்டி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். திருச்செந்தூா் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பி.வதனாள், திருச்செந்தூா் இஸ்ரோ 7ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் 7ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் கே.விமலா, விளாத்திகுளம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். திருச்செந்தூா் இஸ்ரோ 3ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் எம்.கண்ணன், சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
இம்மாறுதல்கள் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், உடனடியாக மாற்றப்பட்டுள்ள புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.