» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 75வது குடியரசு தின விழா: ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

வெள்ளி 26, ஜனவரி 2024 8:14:38 AM (IST)தூத்துக்குடியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 

75வது குடியரசு தின விழா தூத்துக்குடி தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  கோ. லட்சுமிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டது.  

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 681 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 01 பயனாளிக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால்  இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.32,046 மதிப்பிலான தேய்ப்பு பெட்டி, 11 பயனாளிகளுக்கு ரூ.60,269 மதிப்பிலான தையல் இயந்திரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.20,040 மதிப்பிலான தையல் இயந்திரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சிதிட்டத்தின்கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.17,584 மதிப்பிலான உபகரணங்கள், கூட்டுறவுத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ160.20 இலட்சம் மதிப்பிலான தொழில் கடன் மற்றும் சுய உதவிக்கடன் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 65 லட்சத்து 55ஆயிரத்து 936 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

விழாவில் வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கெளரகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, திட்ட அலவலர் ஐஸ்வர்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுகாசிம், தாசில்தார்கள் பிரபாகரன், ஜான்சன், விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டிஎஸ்பிகள் சுரேஷ், அருள், லோகேஸ்வரன், ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், காவல்துறை மக்கள் தொடர்பு அலுவலர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


 
விழாவில் தமிழ்நாடு காவல்துறை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கம்  வழங்கப்பட்டது.  மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  அருள் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சுபணியாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கு மாவட்ட பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் பெற்ற காவல்துறையினரையும், மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல் துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.


மக்கள் கருத்து

JAIHINDJan 26, 2024 - 09:54:32 AM | Posted IP 172.7*****

JAIHIND - BJP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory