» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் : மத்திய அமைச்சர் வி.கே.சிங் தகவல்!

புதன் 24, ஜனவரி 2024 8:25:26 AM (IST)



"தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவு பெறும்” என்று நெல்லையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் நேற்று நடந்தது. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய தரைவழி நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் நலத்திட்டங்களின் முழு பலன்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மத்திய அரசின் நோக்கம். விளம்பரத்திற்காக மத்திய அரசு செயல்படுகிறது என தமிழக முதல்-அமைச்சர் குற்றம்சாட்டுவதை முற்றிலும் மறுக்கிறேன். மத்திய அரசு களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. 

வாகனத்தின் அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்ந்து இயங்கினால் மட்டுமே வாகனம் சிறப்பாக ஓடும்.  அதேபோல் மத்திய- மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். ராமர் ஒற்றுமை மற்றும் பொதுவுடமையின் அடையாளம். அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. யாரும் ராமரை வைத்தோ, ராமர் கோவிலை வைத்தோ அரசியல் செய்ய வேண்டாம்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 18 முக்கிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சில இடையூறுகள் இருந்த நிலையில் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. விரைவில் விமான நிலையம், முழு பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. மாநில அரசே அந்த இடத்தை தேர்வு செய்து தந்திருக்கிறது. அந்த இடம் விவசாய நிலங்களாக இருப்பதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில அரசு இந்த பிரச்சினைகளை சரி செய்து தர வேண்டும் அல்லது சரியான வேறு இடத்தை தேர்வு செய்து தர வேண்டும். அந்த இடத்தில் விமான நிலைய பணியை தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை உதவி ஆட்சியர் சேக்அயூப், தாசில்தார் ஜெயலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பாலன், தபால் துறை கண்காணிப்பாளர் சிவாஜிகணேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி, மத்திய அரசின் கள அலுவலர் வேல்முருகன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோடி படம் இல்லாதால் சர்ச்சை!

இந்த நிகழ்ச்சியையொட்டி அங்கு மருத்துவ முகாம் மற்றும் வேளாண்மை கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி படம் இல்லை. இதனால் அங்கு வந்த பா.ஜனதா நிர்வாகிகள் மருத்துவ முகாம் நடத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரதமர் படம் வைத்தால்தான் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கூறி மருத்துவ உபகரணங்களை எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory