» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் எப்ரேம் மறைவு : திருநாவுக்கரசர் எம்பி இரங்கல்

சனி 13, ஜனவரி 2024 10:25:07 AM (IST)

தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் எப்ரேம் மறைவுக்கு சு. திருநாவுக்கரசர் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல்அறிக்கையில், "தூத்துக்குடி தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் எப்ரேம் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். எப்ரேம் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சில காலம் என்னோடு அரசியல் பணியாற்றிவர். சிறந்த பேச்சாளர். சிறந்த பண்பாளர். 

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தி.மு.க. தோழர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory