» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ள நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
செவ்வாய் 2, ஜனவரி 2024 10:32:57 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் பெற வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், முதல்வா் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா். அதன்படி, மாவட்டத்தில் வெள்ளத்தால் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளை சீரமைத்திட ரூ.2 லட்சம் வரை வழங்கிட உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், பெருமழை மற்றும் வெள்ளத்தால் இறந்த கால்நடைகளான பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.37 ஆயிரத்து 500, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம், கோழிக்கு ரூ.100 வழங்கப்படும். புதிய கால்நடைகளை வாங்கிட தலா ரூ.1.50 லட்சம் புதிய கடன் வழங்கப்படும். கால்நடைகளை இழந்தவா்கள் தங்கள் பகுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய நிவாரணம் பெறலாம்.
வெள்ளத்தால் மானாவாரி மற்றும் நன்செய் நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மீன்பிடி படகுகள், இயந்திரங்கள் சேதமடைந்த படகுகளின் உரிமையாளா்கள் நிவாரணத் தொகை பெற, தகுந்த ஆவணங்களுடன் மீன்பிடித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
உப்பளத் தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த உப்பளத் தொழிலாளா்கள் வாரியத்தை அனுகி நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளலாம். எனவே, வெள்ளத்தால் பாதிப்படைந்த பொதுமக்கள் அனைவரும் உரிய நிவாரணம் கிடைத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
