» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா
திங்கள் 11, டிசம்பர் 2023 8:26:00 PM (IST)
பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., சார்பில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.
திருநெல்வேலி 9வது சிக்னல் கம்பெனி என்.சி.சி., அலுவலர் டிஆர்டி சின்கா ஆலோசனையின்படி பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ் தலைமை வகித்து சிறு தானிய உணவு வகைகளின் நன்மைகள் குறித்து பேசினார்.
என்.சி.சி. அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். 9வது சிக்னல் கம்பெனியின் சீனியர் கமெண்டிங் அலுவலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். சி.எச்.எம். சதீஷ், ஹவில்தார் சஞ்சீவ், ஹவில்தார் அம்ரித் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
என்.சி.சி. மாணவர்கள் வரகு பிரியாணி, திணை சாதம், கம்பு லட்டு, கடலை லட்டு, எள் கடலை உருண்டை, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பை தோசை, சிறு பயறு உருண்டை, சிறுதானிய கேக், அவள் பாயாசம், போன்ற பல்வேறு சிறுதானிய உணவுகளை தயாரித்து பார்வைக்கு வைத்தனர். சிறுதானிய உணவுகளை தயார் செய்த என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் செல்வம், செல்வ விநாயகர் அபிவிருத்தி சங்க தலைவர் பிரபாகரன், பொருளாளர் விஜயசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.