» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்த 540 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

திங்கள் 11, டிசம்பர் 2023 7:54:54 PM (IST)

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்த 54 லட்சம் மதிப்பிலான 540 கிலோ கஞ்சாவை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீடி இலைகள், மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிைல், இன்று மதியம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் விளக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது ஒரு இனோவா கார் வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் வண்டியின் பின்புறம்  சீட்டுக்கு அடியில் மூடை மூடையாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கஞ்சா மூடைகளை பறிமுதல் செய்தனர். இதில் 540 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 54 லட்சம் ஆகும்.

இந்த கஞ்சா சென்னையில் இருந்து விளாத்திகுளம் வழியாக வேம்பார் கடற்கரைக்கு கொண்டு வந்து அங்கிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக அந்த காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த சம்மேந்திரன் (45) என்பவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory