» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.3 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!

திங்கள் 11, டிசம்பர் 2023 4:11:34 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் இன்று மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும்  இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குறிப்பாக சின்னமணி நகர் மற்றும் ஆசிரியர் காலனி சந்திப்பு மற்றும் கந்தன் காலனி ஆகிய பகுதிகளில்  தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 11 சென்ட் பரப்பளவு உள்ள ரூ. 3.00 கோடி மதிப்பிலான நிலங்கள் இன்று மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்டது. 

எனவே இது போன்று மாநகராட்சி நிலங்களை தற்காலிக மற்றும் நிரந்தர தடுப்புகளால் ஆக்கிரமிப்பு செய் துள்ள நபர்கள் உடனடியாக தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தெரிவிக்கப்படுகிறது. தவறும்  நிலையில் மாநகராட்சியால் அகற்றப்பட்டு அதற்குண்டான செலவினங்களையும் ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சுந்தர்Dec 12, 2023 - 09:56:34 PM | Posted IP 172.7*****

மாநகரில் அடுத்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்பு எப்போ.

ஞானராஜ் கோமஸ்Dec 12, 2023 - 05:55:01 PM | Posted IP 172.7*****

வீவீடி சிக்னல் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுமா..

BMKPDec 11, 2023 - 08:32:43 PM | Posted IP 172.7*****

இதுபோன்று தூத்துக்குடி மாநகராட்சி 1வது வார்டு சங்கரபேரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory