» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு விழிப்புணர்வு பேரணி!

திங்கள் 11, டிசம்பர் 2023 4:09:05 PM (IST)மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் பதிவு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு- 2023 தொடர்பான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   இன்று (11.12.2023) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அரசினால் துவக்கப்பட்ட சமூக உரிமைகள் (ரைட்ஸ்) திட்டத்தின் ஒரு அங்கமாக சமூக தரவுகள் பதிவுப்பணி மற்றும் தகவல் தொடர்பு பணிக்கான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி இன்று துவக்கி வைக்கப்பட்டது. 

மேலும், விழிப்புணர்வு பணியின் ஒரு அங்கமாக கலை குழுவினர்களைக் கொண்டு வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளும் துவக்கி வைக்கப்பட்டது. பேரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு தொடர்பான பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேனரில் கையொப்பமிட்டு வாகன பிரசாரமும் இன்று துவக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory