» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!

ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)புதிய துறைமுகம் ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை சீற்றம் தணியவும், சென்னை மக்கள் பேரிடர் ஆபத்தில் இருந்து மீண்டு நலமுடன் வாழவும், தொற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி புதிய துறைமுகம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்களின் 83வது அவதார பெருமங்கல விழா, மன்ற ஆண்டு விழா கலச விளக்குவேள்வி பூஜை, சக்தி மாலை அணியும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

குரு பூஜை, வினாயகர் பூஜை,முக்கோண சக்கரம், முக்கோணயாக குண்டம் 11, கலசம், 11 ஓம் சக்தி விளக்கு வைத்து இயற்கை சீற்றம் தணியவும், சென்னை மக்கள் பேரிடர் ஆபத்தில் இருந்து மீண்டு நலமுடன் வாழவும், தொற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வியை தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கிவைத்தார். சக்தி கொடியை மன்ற செயலாளர் நயினார் ஏற்றினார்.

நூற்றுக்கணக்கான மகளிர் 108, 1008 தமிழ் மந்திரம் படித்து குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து சக்தி மாலை அணியும் விழாவை மன்ற தலைவர் கண்ணகி தொடங்கிவைத்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற துணைத்தலைவர் தமிழரசன் தொடங்கிவைத்தார்.

விழாவில், பிரச்சார குழு இணைச்செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ண நீலா, வட்டத் தலைவர் செல்வம், திருவிக நகர் சக்திபீட வேள்விக்குழு பத்மாவதி, சென்னை டாக்டர்.பாலாஜி, தெர்மல் சக்தி பீடம் ராஜி, மன்ற பொறுப்பாளர்கள் காஞ்சனா, முத்துக்குமார், தனபால், மணி, பூல்பாண்டி, துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Dec 11, 2023 - 10:50:42 AM | Posted IP 172.7*****

இப்படி தேவை இல்லாமல் செலவு செய்வதை விட சென்னை மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பினால் உங்களுக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும் மன நிம்மதி கிடைக்கும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory