» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது

ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2023ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புதுக்கோட்டை பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம் விகாசா பள்ளி, புனித மேரியன்னை மகளிர் கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 8 மையங்களில் நடைபெற்றது. 

தேர்வு எழுதும் மையங்களுக்கு இன்று சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா,  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  தேர்வை முன்னிட்டு எஸ்பி தலைமையில், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மேற்பாா்வையில் 7 துணைக் கண்காணிப்பாளா்கள், 33 ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 850 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வில் 9068 விண்ணப்பதாரர்களில் 6,065 ஆண் விண்ணப்பதாரர்களும், 1,643 பெண் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 7708 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வில் 1,012 ஆண் விண்ணப்பதாரர்களும் 348 பெண் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 1360 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளவில்லை.

காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை 2ஆம் நிலைக் காவலருக்கான 2023ஆம் ஆண்டுக்கான எழுத்துத் தோ்வு இன்று நடைபெற்றது. தேர்வு மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்  எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory