» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!

ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

விளாத்திகுளத்தில் பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள ஜமீன் செங்கல்படை பகுதியில் வசிப்பவர் சக்கையன் இவரது மகன் சத்தியமூர்த்தி (24), இவர் நேற்று இரவு 8 மணி அளவில் குளத்தூரில் இருந்து விளாத்திகுளத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.  விளாத்திகுளம் - தூத்துக்குடி மெயின் ரோட்டில் பாலம் அருகே செல்லும்போது எதிரே வந்த ஒரு லாரி பைக் மீது மோதியயது. 

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த துரை மகன் வெங்கடேஷ் கார்த்திக் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

வெளியிடுபட்டிDec 11, 2023 - 08:54:49 AM | Posted IP 172.7*****

என்று ஊர் இருக்கா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory