» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் வயோலா மார்க்கெட் தலைமை வகித்தார். தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜுலியற் ஜெயசீலி வரவேற்றார். மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல்கள், நடனம் மற்றும் கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் இடம் பெற்றன.
இதையடுத்து 150 ஏழை மானவிகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியை ஏஞ்சலின் பிரியா தொகுத்து வழங்கினார். இதில் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா,பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், தூய யோவான் பேராலய உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமார்,சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.