» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நல்ல சமாரியன் மனநல காப்பகத்திற்கு புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:13:44 AM (IST)
நாசரேத்தில் நல்ல சமாரியன் மனநலக் காப்பகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நாசரேத்தில் மனநலம் குன்றியவர்களுக்கும், தெரு ஓரங்களில் ஆதரவின்றி தி ரிபவர்களுக்காகவும் நல்ல சமாரியன் மனநலக் காப்ப கம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்காப்பகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா சாத்தான்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அருள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.பி.பிரமநாய கம், மூக்குப்பீறி ஊராட்சி மன்றதலைவர் கமலாகலை யரசு ஆகியோர் முன்னிலைவகித்தனர்.சிறப்பு அழைப் பாளர்களாக மூக்குப்பீறி அ ரசுஆரம்பசுகாதாரநிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சோனியா, நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன், நாசரேத் காவல் துறை உதவி ஆய்வாளர் ராய்ட்சன் ஆகியோர் கலந் து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார்.ஜெயரேவதி வர வேற்றுபேசினார்.சாத்தான் குளம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள் புதியக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.நிறை வாக கிளாட்வின் ஜோசப் நன்றி கூறினார்.