» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படகில் ராட்சத அலை மோதியதால் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:50:29 AM (IST)
திருச்செந்தூர் அருகே படகில் ராட்சத அலை மோதியதால் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த குரூஸ் மகன் ஆனந்த் (36). இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜூலியஸ் மகன் ரவிஸ்டன் (30) என்பவரும் நேற்று பகலில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். சுமார் 5 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலை படகு மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ரவிஸ்டன் கடலில் தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த், அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். இதை பார்த்து அங்கு மீன்பிடித்துக் கொண்டு இருந்த சக மீனவர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களின் உதவியோடு ரவிஸ்டனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது பேச்சி மூச்சின்றி இருந்த ரவிஸ்டனை உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆனந்த் ஆலந்தலை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)
