» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் இளம்பெண் பரிதாப சாவு: கணவர் படுகாயம்!

ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:48:23 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி லதா (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டையில் இருந்து தங்களது ஊருக்கு மோட்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வந்தபோது திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது.

இதனால் பைக் கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் லதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் ரவிக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory