» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சனி 9, டிசம்பர் 2023 5:24:36 PM (IST)
நெல்லையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மாநகராட்சியில் மழை நீர் தேங்கியது. சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பல மணி நேரம் நீடித்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலப்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் தாழ்வான பகுதிகளில் உள்ள சில குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் மின்சாதன பொருட்கள் மற்றும் தேவையான பொருள்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தினர்.
இதேபோன்று வண்ணாரப்பேட்டை சாலையில் தொடர் மழை காரணமாக கழிவு நீர் வெளியேறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.