» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெறி நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி: மக்கள் பீதி!

சனி 9, டிசம்பர் 2023 11:24:24 AM (IST)



விளாத்திகுளத்தில் வெறி நாய்கள் கடித்து 22 ஆடுகள் உயிரிழந்தன. நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் ஆற்றங்கரையோரம் 14வது வார்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான 22 ஆடுகள் மற்றும் குட்டிகள் வெறி நாய்கள் கடித்து உயிரிழந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கூறும்பொழுது பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் கடிகள் மூலம் பலமுறை பல்வேறு இடங்களில் ஆடுகள் பலியாக உள்ளன பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

இதுகுறித்து தகவல் அறிந்து  கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், கால்நடை மருத்துவர், பேரூராட்சிதலைவர் சூர்யாஅயன் ராஜ், திமுக நகர செயலாளர் வேலுச்சாமி, சென்றாய பெருமாள், செண்பகரத்தினம், 14வது வார்டு கவுன்சிலர் பிரியாமுனியசாமி ஆகியோர் வந்து பார்வையிட்டு ஆட்டின் உரிமையாளரிடம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளை வெறிநாய்கள் கடித்தில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு, சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 22 ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory