» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டி: மேயர் பரிசு வழங்கி பாராட்டினார்!

வெள்ளி 8, டிசம்பர் 2023 4:21:17 PM (IST)தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கினார். 

மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, பண்பாடு நிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்,  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  ரெஜினி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

balaDec 8, 2023 - 09:04:36 PM | Posted IP 172.7*****

regular practice required

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory